சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த சிவபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு பால்,தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்திருந்த கூழ், கொப்பரையில் ஊற்றப்பட்டு, அம்மனுக்கு படையலிட்டனர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.