மலைக்கோயிலில் திருட்டு முயற்சி: பரிகார ஹோமம் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2017 02:06
தேவாரம்: கோம்பை திருமலை ராயப்பெருமாள் மலைக்கோயில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது. கருவறை வரை திருடர்கள் சென்றதால் பரிகார ஹோமம் செய்ய அறநிலையத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கோம்பை ராமக்கல் மெட்டு மலையடிவாரத்தில் திருமலைராயப்பெருமாள் மலைக்கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் புரட்டாசி சனிவாரத்திருவிழா விமர்ச்சியாக கொண்டாடப்படும். மற்ற நாட்களில் அர்ச்சகர் மோகன் காலபூஜைகள் நடத்துவார். ஜூன்10ல் அவர் வழக்கம் போல கோயிலுக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், கோயில் நிர்வாக அலுவலர் செந்தில் குமாருக்கு தகவல் கொடுத்தார். அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி கோம்பை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மனு ரசீது கொடுக்க கூட போலீசார் தயாராக இல்லை. பக்தர்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன் கோயிலில் இருந்த கலசத்தை சிலர் திருடி சென்றனர். தற்போது கோயில் பூட்டை உடைத்து கருவறை வரை சென்றுள்ளனர். என்ன பொருட்கள் திருடு போனது என்பதை சுட்டிக்காட்ட அறநிலையத்துறையும் முன்வரவில்லை,என்றனர். நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ‘பரிகார ஹோமம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு முயற்சி குறித்து கோம்பை போலீசில்புகார் கொடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.