திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.27 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2017 04:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 36 உண்டியல்கள், உப கோயில்களாக அங்காளபரமேஸ்வரி சமேத குருநாதன் கோயில், சொக்கநாதர் கோயில், காசிவிஸ்நாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில்களில் உண்டியல்கள் உள்ளன. அந்த உண்டியல்கள் கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் 27 லட்சத்து ஆயிரத்து 800 ரூபாய், தங்கம் 320கிராம், வெள்ளி 3 கிலோ 400 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள், அய்யப்ப சேவா சங்கத்தினர், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.