பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
01:06
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாளுக்கு வஸ்திரம் செலுத்தி, திருப்பதி தேவஸ்தானம் மரியாதை செலுத்தியது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வை காசி பிரம் மோற்சவ, 8ம் நாள் திருவிழாவின் போது, வரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் மரியாதை செலுத்தும். அந்த வகையில், மூலவர், உற்சவர், தாயார் ஆகியோருக்கு வஸ்திரம் சாற்றப்பட்டு, தேவஸ்தான அதிகாரிகள், நேற்று முன்தினம் காலை , 10:00 மணிக்கு சிறப்பு செய்தனர். தொடர்ந்து, மதியம், 2:30 மணிக்கு, தொட்டி திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு, 6:00 மணிக்கு குதிரை வாகனத்தில், பெருமாள் எழுந்தருளினார். சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், ‘வேடு பறி உற்சவம்’ அதாவது திருமங்கையாழ்வார், கோவிலை கட்டுவதற்காக வேடுவன் கோலத்தில் திருடியதை நினைவுப்படுத்தும் வகையில் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் சன்னதி தெரு வரை சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் ராஜவீதிகளில் வலம் வந்து, கோவிலை சென்றடைந்தார்.