திருநெல்வேலி: திருநெல்வேலி, ஜங்ஷன் அருகே அருகன்குளத்தில் உள்ள காட்டுராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயில் நெல்லை ராமேஸ்வரம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இது ஜடாயுவிற்கு ராமர் முக்தி கொடுத்த ஸ்தலமாகும். இதன் அருகில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலையில் யாகசாலை பூஜைகள் துவங்கின. காலை 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. முற்பகல் 11:00 மணிக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மூலஸ்தானம், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.