பதிவு செய்த நாள்
16
நவ
2011
11:11
கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உண்டியல் வருமானம் மூலம் ரூ.13 லட்சத்து 14 ஆயிரத்து 977 கிடைத்தது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகன கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உண்டியல் வருமானம் 3 மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படும். இந்நிலையில் நேற்று தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன், ஆய்வாளர் தங்கம், கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், மேலாளர் சோனாசலம்பிள்ளை, திருக்கோயில் பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் கோயிலில் உள்ள 17 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன. இப்பணியில் விவேகானந்த கேந்திர பள்ளி, கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் உண்டியல் மூலம் 13 லட்சத்து 14 ஆயிரத்து 977 ரூபாய் மற்றும் 5 கிராம் தங்கம், 70 கிராம் வெள்ளி, மலேசிய ரிங்கிட் 16, சவுதி ரியால் 1, யூ.ஏ.இ., 1 ஆகியன வருமானமாக கிடைத்தது.