பதிவு செய்த நாள்
16
நவ
2011
11:11
நாகர்கோவில் : கோட்டாறு சவேரியார் ஆலய பெருவிழா வரும் 24ம் தேதி துவங்கி டிச.3ம் தேதி வரை நடக்கிறது. கேட்டவரம் தரும் கோட்டாறு சவேரியார் ஆலய பெருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முதல் நாள் விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் துறை செய்கிறது. காலை கூட்டுத்திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம், ஆடம்பர கூட்டுத்திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரண்டாம் நாள் காலை திருப்பலி, மாலை ஆடம்பர கூட்டுத் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை மரியாயின் சேனை பேராலய கியூரியா, இளைஞர் இயக்கம் செய்துள்ளது. மூன்றாம் நாள் விழாவான 26ம் தேதி திருப்பலி, ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை குடும்ப நல இயக்கம் வின்சென்ட் தே பவுல் சங்கம் செய்துள்ளது. 27ம் தேதி திருப்பலி, முதல் திருவிருந்து, நற்கருணை ஆராதனை, பொது ஆராதனை, நற்கருணை ஆசீர், ஆடம்பர கூட்டுத்திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கத்தோலிக்க சங்கம், கத்தோலிக்க சேவா சங்கம் செய்துள்ளது. 28ம் தேதி திருப்பலி, ஆடம்பர கூட்டுத்திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை நகர வியாபாரிகள் செய்துள்ளனர். 29ம் தேதி திருப்பலி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்துள்ளனர். 30ம் தேதி திருப்பலி, கூட்டுத்திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகங்களின் பணியாளர்கள் செய்துள்ளனர். டிச.1ம் தேதி திருப்பலி, கூட்டுத்திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தெற்கு ஊர் மக்கள் செய்துள்ளனர். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 2ம் தேதி திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை வடக்கு ஊர் மக்கள் செய்துள்ளனர். அன்று மாலை சிறப்பு மாலை ஆராதனை நற்கருணை ஆசீர் நடக்கிறது. பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை வகிக்கிறார். இரவு தேர்ப்பவனி நடக்கிறது. 10ம் திருவிழாவான 3ம் தேதி காலை தூய சவேரியார் பெருவிழா திருப்பலி பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து மலையாள திருப்பலியும், தேர்ப்பவனியும் நடக்கிறது. இது குறித்து ஆலய பங்குதந்தை ஜாண் ராபர்ட்ஜூலியஸ், இணை பங்கு தந்தை அமுதவளவன், பேரவை செயலாளர் அந்தோணி சவரிமுத்து, பொருளாளர் சகாயதிலகராஜ் ஆகியோர் கூறியதாவது: திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும். கொடியேற்றத்துக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை பூசையின் போது ஆலயத்தில் மணி அடித்து திருவிழா அறிக்கை வாசிக்கப்படும். 10ம் நாள் விழாவான 3ம் தேதியுடன் விழா முடிவடைந்தாலும், 8ம் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கும். அன்று 1643ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சவேரியாரின் உடல் பாகமான நகம் மற்றும் சதை பக்தர்கள் முத்தம் செய்ய கொடுக்கப்படும். இந்த ஒரு நாள் மட்டுமே சவேரியாரின் திருப்பண்டங்கள் பக்தர்கள் முத்தம் செய்ய அனுமதிக்கப்படும். இந்த வாய்ப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். உள்ளூர் விடுமுறை சவேரியார் ஆலய பெருவிழாவின் 10ம் நாளான வரும் டிச.3ம் தேதி ஏரளமான பக்தர்கள் கலந்துகொள்வர். எனவே அன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.