திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக மேற்கூரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2017 12:06
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. காரைக்கால் திருநள்ளார் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார்.இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.ஆனால் சனிக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கணப்பட்டு வருகிறது.இதனால் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் மூலம் ராஜகோபுரம் அருகில் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் பாதையில் ரூ.10 லட்சம் மதிப்பில் வரும் வெயில்,மழை உள்ளிட்ட காலத்தில் பக்தர்கள் சிரம் இன்றி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் நிரந்தர மேற்கூரை அமைக்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறுகையில். திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருகின்றனர்.வெயில் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு தற்காலிகமாக பந்தல்அமைக்கப்பட்டது.இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் வரும் பக்தர்கள் வெயில்,மழை பாதிப்பு இல்லாமல் பக்தர்கள் எந்த ஒரு சிரம் இன்றி தரிசனம் செய்யலாம்.மேலும் விரைவில் பணிகள் முடியும் நிலையில் உள்ளது என்று கூறினார்.