கோத்தகிரி : கோத்தகிரி அளக்கரை சாலை, காமராஜர் நகரில் உள்ள கன்னிமூல கணபதி மற்றும் பாலமுருகன் கோவிலின் மகா கும்பாபிேஷக விழா நடந்தது. விழாவையொட்டி, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை, நாடி சந்தானம் உட்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவன்று காலை, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. திருமுருகன் பூண்டி ராஜகுரு சுவாமிகள் சவுந்தரராஜ சிவாச்சாரியார், முன்னின்று நடத்தினார். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவில், ஒரே பாறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, கூடுதல் சிறப்பாகும்.