பதிவு செய்த நாள்
19
ஜூன்
2017
01:06
ஓசூர்: தளி அடுத்த பெல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில், 48வது நாள் மண்டல பூஜை நடந்தது. தேன்கனிக்கோட்டை அடுத்த தளி அருகே உள்ள பெல்லூர் கிராமத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், பெல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் உதவியுடன் கோவில் சீரமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல், 30 ல், கும்பாபிஞஷக விழா நடந்தது. அதைத்தொடர்ந்து, 48 நாட்களுக்கு தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஞஷகம் செய்யப்பட்டது. இதையடுத்து, 48 வது நாளான நேற்று முன்தினம் காலை மண்டல பூஜை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு கோ பூஜை, விநாயகர் ஹோமம், கங்க பூஜை, சுவாமி அபிஞஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.