Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீருத்ரம் சொல்லும் முறை மனை சிறக்கும் மகாசிவராத்திரி மகிமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகான்கள் காட்டும் குருபக்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2017
03:06

நம் ஸம்பிரதாயங்களுக்கு மூலமான குருமார்களாகவும் முக்கியமான குருமார்களாகவும் இருந்த மஹா பெரியவர்களோ, தாங்களே தங்கள் குருமார்களிடம் அபாரமான பக்தி செலுத்தியிருக்கிறார்கள். ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி. அவருக்கும்கூட ஒரு குருவிடம் தாம் பணிவாக இருந்து, சிஷ்யனாகி, உபதேசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று இருந்திருக்கிறது. பரமேச்வரனான அவரே தம் சொந்தக் குழந்தையிடம், கை கட்டி, வாய் பொத்திப் பிரணவோபதேசம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஞானமே வடிவானவள் அம்பாள். அவளும் பதியான ஈஸ்வரனிடம் சிஷ்யையாகி உபதேசங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறாள். அநேக ஆகம, தந்த்ரங்கள் ஈச்வரன் அம்பாளுக்கு உபதேசம் பண்ணினவைதான்.

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம ராம வராநநே

என்பதாக (மும்முறை ராமநாமா சொன்னால் அது ஸஹஸ்ர நாமம் சொன்னதற்கு ஸமானம் என்று) ராம நாம மஹிமையைச் சொல்லும் சுலோகம் அம்பாளுக்கு ஈஸ்வரன் உபதேசித்ததுதான் என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஜம்புகேஸ்வரம் (திருவானைக்கா) போன்ற பல க்ஷேத்ரங்களில் அம்பாள் ஈஸ்வரனிடம் உபதேசம் வாங்கிக் கொள்வதாக ஸ்தல புராணங்களில் இருக்கிறது. குரு பரம்பரையில் தத்தாத்ரேயருக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் உண்டு. அப்படிப்பட்டவரே, மண், தண்ணீர், மலைப்பாம்பு, குளவி, ஒரு தாஸி, ஒரு வேடன், ஒரு சின்னக் குழந்தை இவை உள்பட 24 பேரைத் தம்முடைய குரு என்று சொல்லிக் கொண்டு அவர்களிடமிருந்து தான்  இன்னின்ன பாடம் கற்றேன் என்று பாகவதத்தில் சொல்கிறார்.

ஸ்ரீசங்கரரின் குருபக்தி: ஆசார்யாள் என்ற மாத்திரத்தில் லோகமெல்லாம் நினைத்துப் போற்றும் நம் பகவத்பாதாளுக்கு இருந்த குருபக்தி சொல்லி முடியாது. பத்ரிநாத்தில் அவர் தம்முடைய குருவான கோவிந்த பகவத்பாதரையும், பரமகுரு (குருவுக்கு குரு)வான கவுடபாதரையும் ஸாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமாகவே பார்த்து, அப்போதுதான் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லி, அடிக்கு அடி, அவர்களை நமஸ்காரம் பண்ணினார் என்று சொல்கிறதுண்டு. இவரே அந்த தக்ஷிணாமூர்த்தியின் அவதாரந்தான். குருவின் மஹிமையை ஆசார்யாள் ஒரு இடத்தில் சிலாகித்துச் சொல்லும்போது, பித்தளையைக்கூடப் பொன்னாக்குகிற ஸ்பர்சவேதி மாதிரி குருவானவர் பித்தளை மனசுக்காரர்களையும் மாற்றித் தங்கமாக ஜொலிக்கச் செய்பவர் என்று சொன்னால்கூட குரு மஹிமையை உள்ளபடி சொன்னதாகாது. ஏனென்றால் ஸ்பர்ஸவேதியின் அருகிலிருந்த பித்தளை, தான் மட்டுமே தங்கமாக ஆகுமே தவிர, மற்ற பித்தளை வஸ்துக்களைத் தங்கமாக்குகிற ஸ்பர்ஸவேதியாக மாறாது. ஆனால் குருவை ஆச்ரயித்த சிஷ்யனோ, தான் பூர்ணத்வம் பெறுவதோடு மட்டுமின்றி, தானும் குருவாகி மற்றவர்களுக்குப் பூர்ணத்வம் தருபவனாகி விடுகிறான். அதனால் குரு ஸ்பரிஸவேதிக்கும் மேலே என்கிறார்.

ஸ்ரீராமானுஜரின் குருபக்தி: ராமானுஜாசாரியார் திருக்கோட்டியூர் நம்பி என்கிற தம்முடைய ஒரு குருவின் வார்த்தையை உல்லங்கனம் பண்ணி (மீறி) எல்லா ஜனங்களுக்கும் உபதேசம் செய்தார் என்று பலர் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவரே இதே நம்பியிடம் எத்தனை அடக்கத்தோடு நடந்து காட்டியிருக்கிறாரென்றும் வைஷ்ணவ குரு பரம்பரைக் கதைகள் சொல்கின்றன. உபதேசம் தருவதற்கு முந்தி திருக்கோட்டியூர் நம்பி ராமானுஜாசாரியரை 18 தடவை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு நடக்கப் பண்ணி விட்டே கடைசியில் உபதேசம் கொடுத்தார். ஸ்ரீராமானுஜர் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இப்படி நடையாக நடந்தார். ஸ்மார்த்தர்கள் ஆசார்யனுக்கு நாலு தரம் நமஸ்காரம் பண்ணுவது வழக்கம். வைஷ்ணவர்கள் ஆசார்யன் போதும் - போதும் என்கிற வரையில் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். ஒரு தரம் ஸ்ரீரங்கத்துக்கு வந்த திருக்கோட்டியூர் நம்பி ஜில்லென்று காவேரி ஜலத்திலே நின்று கொண்டிருந்தார். ஆற்றங்கரை மணலோ நல்ல வெயிலில் நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட மண்ணில் ஸ்ரீராமானுஜர் உடம்பு கன்றிப் போவதையும் பொருட்படுத்தாமல் நமஸ்காரம் பண்ணிக் கொண்டேயிருந்தார். அவருடைய குருபக்தியை சோதனை பண்ண வேண்டும் என்று இப்படிச் செய்த நம்பி அப்புறம் மனசு தாங்காமல் அவரை நிறுத்தினார்.

பத்மபாதரின் குருபக்தி: ஆசார்யாள் (ஸ்ரீசங்கரர்) காசியில் வாஸம் செய்தபோது ஒரு நாள் அவர் கங்கைக்கு இக்கரையிலும், ஸநந்தனர் அக்கரையிலுமாக இருந்தார்கள். ஆசார்யாளின் வஸ்திரங்களைக் காயப்போட்டு வைத்துக் கொண்டிருந்தார் ஸநந்தனர். ஆசார்யாள் அப்போது சிஷ்யருடைய குரு பக்தியை லோகத்துக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்தார். அதனால் தாம் ஸ்நானம் பண்ணி, ஈரவஸ்திரத்துடன் நின்றுகொண்டு, அக்கரையிலிருந்த சிஷ்யரிடம், காய்ந்த வஸ்திரம் கொண்டு வா என்றார். ஆசார்யாள் ஒன்று சொல்லிவிட்டால் அதை உடனே பண்ணியாக வேண்டும் என்று பக்தி வேகம் ஸநந்தனருக்கு வந்துவிட்டது. ஆசார்யாள் சொட்டச் சொட்ட ஈரக்காஷாயத்தோடு நிற்கிறாரே என்று அவருக்கு மனஸ் பறந்தது. ஆவேசமாக அன்பு, பக்தி வந்துவிட்டால் அங்கே அறிவுப்பூர்வமான சிந்தனை எல்லாம் நிற்காது. அதனால் படகு பிடித்துக் கொண்டு போக வேண்டும் என்று ஸநந்தனரால் காத்துக் கொண்டிருக்க முடியவில்லை. எதிரே, அத்தனை பெரிசாக, ஆழமாக அலை வீசிக் கொண்டு கங்கா நதி என்று ஒன்று இருப்பதே அவருக்குத் தெரியவில்லையே!

அப்புறம் படகைப் பற்றி எப்படி நினைப்பார்? கொஞ்சம் தூரத்தில் ஆசார்யமூர்த்தி ஈரத்துணியுடன் நிற்கிறார். காய்ந்த வஸ்திரம் கேட்டு அவர் ஆக்ஞை பண்ணிவிட்டார் என்பது மாத்திரம்தான் அவர் புத்தியில் மொத்தமாக வியாபித்திருந்தது. அதனால் எதிரே ஏதோ ஸம பூமி, கட்டாந்தரை இருக்கிறது போல, அவர் பாட்டுக்கு கங்கைப் பிரவாஹத்தில் இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டார். கங்கையின் ஆழத்தில் முழுகிப் போவோமே, முழுகாமல் நீந்தினால் கூட வஸ்திரம் நனைந்து போய் குருநாதன் போட்ட ஆக்ஞையின் நோக்கம் கெட்டுப் போய் விடுமே என்பதெதுவும் அப்போது அவருக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு பக்திப் பரவசம் ஏற்பட்ட போது, ஈஸ்வரன் (அந்த ஈஸ்வரன்தான் ஆசார்ய ரூபத்தில் வந்து நின்று கொண்டிருப்பதும்) அதற்கான பெருமையைத் தராமல் போவானா? அதனால் அப்போது ஒரு அதிசயம் நடந்தது.

ஸநந்தனர் பாட்டுக்குப் பிரவாஹத்தின் மீது நடக்க - நடக்க அவர் அடுத்த அடி வைக்க வேண்டிய இடத்தில் கங்காதேவி நீரோட்டத்துக்கு மேலாக ஒவ்வொரு பெரிய தாமரைப் பூவாகப் புஷ்பித்துக் கொண்டே போனாள். இந்தப் பத்மங்களில் காலை வைத்துக் கொண்டே ஸநந்தனரும் கங்கையின் மேலே நடந்து போனார். ஆனால் அவருக்கு இப்படித் தாமரைகள் முளைத்துத் தாம் அடி வைப்பதைத் தாங்குவதும் தெரியாது. தீமிதியில் நெருப்புத் தெரியாது என்றால் இவருக்கு ஜில்லென்று, மெத்தென்று புஷ்பம் இருப்பது தெரியவில்லை. எல்லோரும் பார்த்து அவருடைய குருபக்தி விசேஷத்தை வியந்து கொண்டிருக்கும்போதே. அந்தப் பெரிய நதியைத்தாண்டி இக்கரைக்கு வந்து குருமூர்த்திக்கு வஸ்திரத்தை ஸமர்ப்பித்தார்.

எப்படியப்பா நீ கங்கையைத் தாண்டி வந்தே? என்று ஆசார்யாள் வேடிக்கையாகக் கேட்டார். அப்போதுகூட ஸநந்தனர் ஆற்றைத் திரும்பிப் பார்த்து பத்மங்கள் முளைத்ததைத் தெரிந்து கொள்ள நினைக்கவில்லை. ஆக்ஞை பண்ணினது ஆசார்யன். அவரால் ஆக்ஞை பண்ணப்பட்டது எப்படி நிறைவேறாமல் போகும்? அவர் அநுக்ரஹமே நம்மை அங்கேயிருந்து இங்கே உருட்டிக் கொண்டு வந்துவிட்டது என்பது அவருக்கு நிச்சயம். அதனால், தங்களை ஸ்மரித்தால், கடக்க முடியாத ஸம்ஸார ஸாகரமே முழங்கால் மட்டும் ஜலமாகிவிடும்போது, தாங்களே வாயைத் திறந்து ஆக்ஞை பண்ணியிருக்கையில் நான் கங்கையைத் தாண்டினது என்ன பிரமாதம்? என்றார். அப்புறம்தான் ஆசார்யாளே அவருக்குப் பத்மங்கள் புஷ்பித்ததைக் காட்டி, அவை இவருடைய பாதத்தைத் தரித்ததால் பத்மபாதர் என்ற பெயரை இவருக்குச் சூட்டினார். ஈஸ்வரனாகவே ஒரு நிலையில் இருந்தாலும் இன்னொரு நிலையில் அவனுடைய பாதபத்மமாக நினைக்கப்படும் பகவத்பாதருக்குப் பொருத்தமாக இப்படி சிஷ்யரும் பத்மபாதராக அமைந்தார்.

வைணவர்களின் குருபக்தி: நம்முடைய சித்தாந்தத்தில் ஆசார்ய புருஷர்களுக்கு மேலேயும், பெருமாளுக்கு அடுத்ததாகவும் இருக்கிற ஆழ்வார்களில் பிரதானமாயுள்ள நம்மாழ்வாரிடம் ஏகாந்த பக்தி வைத்து மதுரகவி பாடியிருப்பதும் பெருமாள் மேலேயே அருளிச் செயல் என்னும் பிரபந்தம் பாடினமாதிரிதான் என்றே அந்த சம்பிரதாயத்துப் பெரியவர்கள் இதை நாலாயிரத்திலே சேர்த்து, அவருக்கும் ஆழ்வார் என்று ஏற்றம் கொடுத்திருக்கிறார்கள். தேவு மற்றறியேன் என்று இவர் சொன்ன மாதிரியே தான் வேதாந்த தேசிகரும் ஆசார்யாத் இஹ தேவதாம் ஸமதிகாம் அந்யாம் மந்யாமஹே என்று சொல்லியிருக்கிறார்.

சீக்கியரின் குருபக்தி: ஆசார்யன் கிடைத்துவிட்டால் போதும், ஸ்வாமி கூட வேண்டாம்; ஸ்வாமிகூட ஆசார்யனுக்கு ஸமதையில்லை என்று பக்தி பண்ணினவர்கள் எல்லா ஸம்பிரதாயத்திலும் உண்டு. குரு என்றால் கூடவே இருந்தாக வேண்டிய சிஷ்யன்-சிக்ஷை-என்பதை வைத்துத்தான் சீக்கிய மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது. அதில் குரு கோவிந்த ஸிங் கல்ஸா என்கிற அவர்களுடைய ஸ்தாபனத்தை ஏற்படுத்தும்போது, நரபலி வேண்டும் என்று கேட்டார். உடனேயே ஒருத்தர் எழுந்திருந்து தன் தலையையே கொடுப்பதற்காக அவரோடு போனார். அவரை அழைத்துக் கொண்டு போன கோவிந்த ஸிங் கொஞ்ச நாழிக்கு அப்புறம் ரத்தம் சொட்டும் கத்தியோடு திரும்பி வந்து இன்னொரு பலி வேண்டும் என்றார். உடனே இன்னொருத்தர் எழுந்திருந்து அவரோடு போனார். மறுபடியும் அவர் ரத்தம் சொட்டுகிற கத்தியோடு திரும்பி வந்தார். இப்படியே ஐந்து தடவை அவர் பலி கேட்க ஐந்து பேர் ஸந்தோஷமாக குரு வார்த்தைக்காகப் பிராணத் தியாகம் பண்ணுவதும் பெரிசில்லை என்று அவர் பின்னோடு போனார்கள்.

அப்புறம் அவர் அந்த ஐந்து பேரையுமே ஸபைக்கு அழைத்துக் கொண்டு வந்து, தம்மைச் சேர்ந்தவர்களின் பக்தி விச்வாசத்தை சோதனை பண்ணுவதற்காகவே தாம்இப்படி விளையாட்டாக பலி கேட்டதாகவும், வாஸ்தவத்தில் எவரையும் கொல்லாமல் ஏதோ ஆட்டு ரத்தத்தைத்தான் காட்டியதாகவும் சொல்லி, உயிரைத் திருமணமாக நினைத்து, பலியாவதற்கு வந்த அந்த ஐந்து பேரையும் கல்ஸாவில் முக்கியஸ்தர்களாக நியமித்தார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar