கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது. கடலுார், திருப்பாதிரிப்புலியூரில், திருவந்திபுரம் சாலையில் அமைந்துளள முத்தாலம்மன் கோவில், சாலை விரிவாக்கத்திற்காக அகற்றி, அதே சாலை ஓரத்தில் புதிதாக கட்டப்பட்டது. அதனையொட்டி வரும் 3ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூஜை வரும் 27ம் தேதி காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. மறுநாள் காலை கோ பூஜை, தன பூஜை, நவகிரிக கலச பூஜைகளைத் தொடர்ந்து அன்று மாலை யாகசாலை பூஜை துவங்குகிறது. வரும் 30ம் தேதி காலை யாக மண்டப பூஜை மகா தீபாராதனையைத் தொடர்ந்து கடம் பறப்பாடாகி காலை 9:30 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும், 9:55 மணிக்கு விநாயகர், முருகன் வராகி மற்றும் மூலவர் முத்தாலம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.