ராசிபுரம் அண்ணாமலையார் கோவில்: 12ம் ஆண்டு நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2017 01:06
ராசிபுரம்: கல்லாங்குளத்தில், அண்ணாமலையார் திருக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நிறைவு விழா பூஜை நடந்தது. ராசிபுரம் அடுத்த, கல்லாங்குளம் அண்ணாமலையார் திருக்கோவில், 12ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணி முதல் மங்கள இசை முழங்க விநாயகர் பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு விசேஷ ஹோமங்கள், அண்ணாமலையாருக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. கல்லாங்குளம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.