சென்னை : சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே, வரும் 22ம் தேதியிலிருந்து கூடுதல் சூப்பர் பாஸ்ட் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலிலிருந்து இந்த ரயில் (எண்.06007) வரும் 22ம் தேதியிலிருந்து ஜனவரி 17ம் தேதி வரை, வாரத்தில் செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 6.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்திலிருந்து இயக்கப்படும் ரயில் (எண்.06008) வாரத்தில் புதன்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலில் பயணம் செய்ய, இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.