விஷ்ணுவின் பக்தியில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் 12 பேர். மேய்ச்சலுக்கு சென்ற பசு, தன் கன்றை நினைத்த அளவில் மடியில் தானாக வே பால் சுரப்பது போல, மனதில் திருமாலை சிந்தித்த அளவிலேயே அவர்களின் நாவில் பாடல்கள் எழுந்தன. அதனால், ஆழ்வார்களின் பாடல்களை பாசுரம் என போற்றுகிறோம். விஷ்ணுவின் கை யிலுள்ள சக்கரம், ராமரின் தம்பிகளான பரதன், சத்ருக்கனன், விபீஷணன், நரசிம்ம தரிசனம் பெற்ற பிரகலாதன் போன்றவர் களையும் ஆழ்வார் என்றே குறிப்பிடுவர்.