பதிவு செய்த நாள்
23
ஜூன்
2017
01:06
வெங்கத்துார் : வெங்கத்துார் செல்லியம்மன் கோவிலில், வரும் 30ம் தேதி, மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துாரில் அமைந்துள்ளது செல்லியம்மன் கோவில். இந்த கோவிலில், புதிய நுாதன கோவில் நிர்மானிக்கப்பட்டு, வரும் 30ல், மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.முன்னதாக, 26ம் தேதி, காலை 6:00 மணிக்கு மகா கணபதி வழிபாடு மற்றும் சங்கல்பம் நடைபெறும். பின், மாலை 4:30 மணிக்கு லட்சுமி பூஜையும், சுகன்யா பூஜை மற்றும் பிரவேசபலியும் நடைபெறும். மறுநாள் 27ம் தேதி, காலை, 7:30 மணிக்கு மூர்த்தி ஹோமமும், மாலை, 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமமும் நடைபெறும்.வரும் 28ம் தேதி, காலை, தீர்த்த சங்கரஹனமும், யாகசாலை நிர்மானமும், அதை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், கும்பலங்காரமும் நடைபெறும். பின், 29ம் தேதி, காலை 7:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். கும்பாபிஷேக நாளான, வரும் 30ம் தேதி, காலை 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதியும் நடைபெறும்.பின், காலை 9:45 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், பின், காலை 10:00 மணிக்கு, மூலாலய மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகங்கள் நடைபெறும். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜைகளும் நடைபெறும்.