பதிவு செய்த நாள்
23
ஜூன்
2017
01:06
திருவள்ளூர் : திருவள்ளூர், சாய்பாபா கோவிலில், நேற்று, ஆனந்த சாய்ராம் பல்லக்கில், பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர், சிவ-விஷ்ணு கோவிலில் உள்ள சாய்பாபா சன்னதியில், நேற்று, காலை, 9:00 மணிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தெற்கு குளக்கரை தெருவில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்தில், நேற்று இரவு, தீபோற்சவம் நடந்தது. திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் உள்ள, ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், நேற்று, காலை, மதியம் ஆரத்தி ஆராதனை நடந்தது. மாலை, ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது.