சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் எட்டு லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் 98 நாட்களுக்கு பிறகு நேற்று நடந்த உண்ணியல் எண்ணிக்கையில் தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர், அறநிலையத்துறை உதவி ஆணையர் பொன்சுவாமிநாதன், ஆய்வாளர் தங்கம், கோயில் கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.உண்டியல் எண்ணிக்கையில் 8 லட்சத்தி 49 ஆயிரத்தி 895 ரூபாயும், 1.800 மில்லி கிராம் தங்கமும், 42 கிராம் வெள்ளியும், 3 அமெரிக்க டாலர், ஒரு சிங்கப்பூர் டாலர், 15 திர்காம் மற்றும் ஆறு ஓமன் ரியால் ஆகியனவும் வருமானமாக கிடைத்துள்ளது.