சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, ரூ.6.62 லட்சம் கிடைத்தது. சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. மூன்று நிரந்தர உண்டியல்கள் உள்ளன. கோவில் செயல் அலுவலர் மாலா தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. அதில், ஆறு லட்சத்து, 62 ஆயிரத்து, 80 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 59 கிராம் தங்கம், 137 கிராம் வெள்ளி இருந்தது.