பதிவு செய்த நாள்
28
ஜூன்
2017
01:06
குன்னுார் :குன்னுார் அருகே, வெலிங்டன் ஐயப்பன் கோவி லில், 30வது ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 25ம் தேதி பகவதி சேவை என அழைக்கப்படும் விளக்கு பூஜை, நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி பூஜைகளை செய்தனர். நேற்று முன்தினம் காலையில், மகா கணபதி ஹோமம், உஷாபூஜை, விஷ்ணு பூஜை, கலசபூஜை, கலச அபிஷேகம், உச்சி பூஜை, அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, ஐயப்பன் அலங்கார ரத ஊர்வலத்தில் கோவிலில் இருந்து துவங்கி போகி தெரு, மவுன்ட் பிளசன்ட் வரை சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. விழாவில், தீபாராதனை, புஷ்ப அபிஷேகம், தாயம்பகா, அத்தாழ பூஜை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். கோவிலில், 2018ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.