பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
01:06
திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், 12 நாட்களில் பக்தர்கள், 33.21 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும், 333 கிராம் தங்கத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து, காணிக்கையாக, பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை, மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர். அந்த வகையில், 12 நாட்களில் உண்டியலில் செலுத்திய பக்தர்களின் காணிக்கை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் ஜான்சிராணி, ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டன. இதில், 33 லட்சத்து, 21 ஆயிரத்து, 36 ரூபாய் ரொக்கம், 333 கிராம் தங்கம், 2,158 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.