Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி ஷீரடி சாய்பாபா ... வத்திராயிருப்பு கோயில் பிரம்மோற்ஸவ விழாவிற்கு நாள்கால் ஊன்றும் விழா வத்திராயிருப்பு கோயில் பிரம்மோற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மனுக்கு கடனாளிகள் பேனர் வைத்து அறநிலையத்துறை அதிரடி
எழுத்தின் அளவு:
கொண்டத்து காளியம்மனுக்கு கடனாளிகள் பேனர் வைத்து அறநிலையத்துறை அதிரடி

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2017
12:06

திருப்பூர்: கோவிலுக்கு வாடகை செலுத்­தாதவர்களின் பட்டியலை, கொண்டத்து காளியம்­மனுக்கு கடனாளிகள் என பேனர் வைத்து, அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்­ளனர்; நிலுவைவைத் துள்ள பூசாரிகளையும், பணி நீக்கம்
செய்துள்­ளனர். காலியிடம் திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில், பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்­மன் கோவில் உள்­ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, கோவை  – சேலம் நெடுஞ்சாலையில், காலி இடம் உள்­ளது. இதை, 40 ஆண்டுகளுக்கு முன், அடிமனை வாடகைக்கு எடுத்த, 22 பேர், கோவிலுக்கு முறையாக வாடகை செலுத்தவில்லை; வீடுகளாகவும், கடை களாகவும் கட்டி,உள் வாடகைக்கு விட்டு, மாதம் பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆயினும், அறநிலையத்துறை நிர்­ணயித்த, குறைந்த அடிமனை வாடகையை கூட கட்டாமல், இழுத்தடித்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள், கோவிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைமற்றும் கவரியுடன், கொண்டத்து காளியம்­மனுக்கு கடனாளிகள் என, அறநிலையத்துறை அதிகாரிகள், பட்டியல் தயாரித்து, கோவில் வளாகத்தில், பிளக்ஸ் பேனர் வைத்து உள்ளனர். கோவிலுக்கு மனையிடவரி செலுத்­தாத பூசாரிகளை, பணி நீக்கம் செய்து, அவர்களின் பெயர் பட்டியலும், பிளக்ஸ் பேனராக வைக்கப்பட்டுள்­ளது. பிளக்ஸ் பேனர் கோவில் அதிகாரிகள் கூறியதாவது: கோவில் நிலத்தை அடிமனை வாடகைக்கு எடுத்த, 22 பேர், 1 கோடியே , 10லட்சத்து, 95 ஆயிரத்து, 821 ரூபாய் நிலுவைவைத் துள்­ளனர். அந்த நிலத்தில் கடைகள், வீடுகள் கட்டி, 84 பே ருக்கு, உள்வாடகைக்கு விட்டு, பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். நிலுவை தொ கையை கட்ட பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்­ளவில்லை. எனவே , சம்பந்தப்பட்ட நபர்களின் பெயருடன், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்­ளது . கோவில் பூசாரிகள் ஐந்து பேர் , 38 லட்சத்து, 38 ஆயிரத்து, 436 ரூபாய் நிலுவை வைத் துள்­ளனர். அவர்கள் பட்டியலும், பணி நீக்க அறிவிப்பும் வைத்துள்ளோம். அவர்களில் இருவர், நிலுவையை செலுத்துவதாக உறுதியளித்துள்­ளனர். ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, விரைவில் கோவில் நிலம் மீட்கப்படும். இவ்வாறு அவர்கள்கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar