5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பெருங்களரி: 23 கிராம மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2017 10:07
சிவகாசி: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி கூடமுடையார் அய்யனார் கோயிலில் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பெருங்களரி திருவிழாவில் அரியநாச்சியம்மனுக்கு, 23 கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாவட்டத்தில் உள்ள சிதம்பராபுரம், அய்யன்கரிசல்குளம், சொக்கலிங்கா புரம், மாயூர்நாதபுரம், சிறுகுளம் உட்பட 23 கிராம மக்கள் குடும்பத்துடன் குலதெய்வ வழிபாட்டிற்காக சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி கூடமுடையார் அய்யனார் கோயிலுக்கு வருகை தந்தனர்.
மூன்று நாட்கள் கோயிலில் கூடாரமிட்டு தங்கி கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் அரியநாச்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாவை யொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்ப டும். இறுதி நாள் விழாவில் கிடா நேர்த்திகடன் செலுத்தப்படும். நேற்று மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைக்கும் விழா நடந்தது. திரளான பெண்கள் பொங் கலிட்டு நேர்த்திகடன் செலுத்தினர். இவ்விழாவிற்காக எந்த ஊர்களில் இருந்தாலும் குடும்பத்துடன் வந்து சுவாமி அருள் பெற்று செல்வர்.உறவினர்களை சந்தித்து கூட்டாக உணவு சமைத்து உணவிருந்தி தங்கள் உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் விழாவாக இந்த விழா அமைகிறது.