காளையார்கோவில்: காளையார்கோவில் சானாஊரணி முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜூலை 3ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று நான்காவது கால யாக சாலை பூஜையும், கோ பூஜை,லட்சுமி பூஜை நடந்தது. 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 9:45 மணிக்கு சோமசுந்தரம் சிவாச்சாரி யார் தலைமையிலான குழு வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றினர். 10:00 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது.தர்ம முனிஸ்வரர் கோயிலுக்கு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மஹாபிஷேகம் , தீபாரா தனை, அன்னதானம் நடந்தது.