பதிவு செய்த நாள்
06
ஜூலை
2017
01:07
திருப்பூர் : திருப்பூர், காங்கயம் ரோடு, ஸ்ரீ சுவேத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. திருப்பூர், காங்கயம் ரோடு, கான்வென்ட் கார்டன், ஜெ.எம்.எஸ்., பள்ளி பின்புறம், ஸ்ரீ சுவேத விநாயகர் கோவில் உள்ளது. புதிதாக கோபுரம், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், ஸ்ரீ கந்த சுப்ரமணியர், மீனாட்சியம்மன், ஐயப்பன், கால பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், கோஷ்ட தெய்வங்கள், தட்சணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு புதிய சன்னதிகள் கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேக யாக பூஜைகள் கடந்த, 3ம் தேதி துவங்கியது. நான்கு கால யாக பூஜை, மூலாலய விக்ரஹங்கள் அஷ்ட பந்தன பிரதிஷ்டை உள்ளிட்டவை நடந்தது. நேற்று, காலை, நான்காம் கால யாக பூஜை நிறைவுற்றவடன், கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் சன்னதிகளில், கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.