திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2017 06:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தட்சணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம் எனும் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தட்சணாயன புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவையொட்டி காலை தங்ககொடி மரத்தில் மேளதாளத்துடன், வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றினர். தங்ககொடி மரத்தில் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.