நாயன்மார்கள் வீதி உலாவில் 63 நாதஸ்வரம், 63 தவில் கச்சேரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2017 12:07
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனி திருவிழா ஜூலை 3ம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. விழாவின் ஐந்தாம் நாளன்று வீரசேகர உமையாம்பிகை தபசு காட்சியில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. இதை முன்னிட்டு சாக்கோட்டை தவில் வித்வான் கே.ஜி., பெருமாள் குழுவினர் சார்பில் 63 நாதஸ்வரம், 63 தவில் வித்வான்களின் பிரமாண்ட இசை கச்சேரி நடந்தது. தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தேர்ந்த வித்வான்கள் கோயில் முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் அமர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விண்ணதிரும் இசை கச்சேரியை நிகழ்த்தினர். தொடர்ந்து வீரசேகர சுவாமி, நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. அப்போது இசைக்கலைஞர்கள் தவில் மற்றும் நாதஸ்வரத்தை இசைத்தபடி சென்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 11ம் தேதி நடக்கிறது. 12ம் தேதி சப்தாவர்ணம் நடக்கிறது.