பதிவு செய்த நாள்
08
ஜூலை
2017
12:07
பழநி: பழநி முருகன் கோயில் அன்னதான மண்டபத்தில் ஒரு கோடி ரூபாயில் எரிகலன் அறை, சமையல் அறை அமைக்கும் பணி நடக்கிறது.பழநி முருகன் மலைக் கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட் களிலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் கடந்த 2012ல் துவக்கப்பட்டது.
அன்னதான கூடத்தில் காய்கறிகள் வைக்க குளிர்சாதன அறைகள், பக்தர்கள் வசதிக்காக காத்திருப்பு அறைகள், குடிநீர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாயில் அன்னதான மண்டபம் விரிவாக்கப்பட உள்ளது.இதில் 70 லட்ச ரூபாயில் சமையல் அறைகள், 8.40 லட்சத்தில் எரிகலன் அறை, 22 லட்சத்தில் ஊழியர்களுக்கு கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடக்கிறது.இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், ”அன்னதான கூடத்தில் தற்போது சமையல்அறை, எரிகலன் அறைகள் உணவருந்தும் அறை அருகே உள்ளன. இதனால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கவும், பக்தர்கள் பாதுகாப்பிற்காகவும், புதிதாக எரிகலன், சமையல் அறைகள் கட்டும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதேபோல பெரியநாயகியம்மன் கோயில், பால சமுத்திரம் பெருமாள் கோயில்களில் வரும் சஷ்டிவிழாவிற்கு முன் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான திருப்பணிகள் துரிதமாக நடக்கின்றன,” என்றார்.