பதிவு செய்த நாள்
10
ஜூலை
2017
11:07
திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக பெரிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகள் தயாராகின்றன. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், களிமண், பேப்பர்கூழ், பிளாஸ்டர் ஆப்பாரிஸ், சிமெ ன்ட் ஆகியவற்றால் பல்வேறு சுவாமி, அரசியல் தலைவர்கள் சிலைகள், கொலு பொம்மைகள், குடில்கள் தயாரிக்கின்றனர். தற்போது விநாயகர் சதுர்த்திக்காக 3இன்ஞ் முதல் 15 அடி உயரமுள்ள திரிபுரகணபதி, மகா கணபதி, துவஜ கணபதி, பாலகணபதி, சிம்மாசனம். லிங்க விநாயகர், குதிரையின்மேல் விநாயகர், காமதேனு விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் சிலைகள் களிமண்ணால் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் சிலைகள் பல்வேறு பகுதிகளிலும் நடை பெறும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளன. பிச்சை கூறியதாவது: எங்கள் மூதாதையர் கிராம திருவிழாக்களுக்காக களி மண்ணால் குதிரைகள் தயாரித்தனர். நான் 27 ஆண்டுகளாக குடும்பத்துடன் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறேன். இரண்டு அடி உயரம் வரை களிமண், ஆற்று மணல் மூலம் சிலைகள் தயாரிக்க முடியும். அதற்கும் உயரமான சிலைகளுக்கு இவற்றுடன் யானை சாணம் சேர்க்க வேண்டும். களி மண்ணால் மட்டுமே சிலைகள் தயாரித்து, வாட்டர் பெயிண்ட் அடிக்கிறோம். ஒரு சிலை தயாரிக்க 10 முதல் 15 நாட்கள் ஆகும், என்றார்.