திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 56 ஆயிரத்து 540 பக்தர்கள் நேற்று மட்டும் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த மூன்று நாட்களாக மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில், நள்ளிரவு முதல் மீண்டும் பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் டிக்கெட் வழங்கப்பட்டது. கூட்டம் காரணமாக பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து சென்றனர்.