ஜம்மு : பயங்கரவாதி புர்ஹான் வானி நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக கடந்த இரு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. இதுவரை 1,94,771 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாகவும், நேற்று 12 வது குழுவில் 4,411 யாத்ரீகர்கள் 170 வாகனங்களில் பகவதி நகரில் இருந்து தரிசனத்திற்கு புறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.