பதிவு செய்த நாள்
10
ஜூலை
2017
12:07
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மல்லூர் ஜெய் சாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமா உற்சவ விழா நேற்று நடந்தது. காலை, 4:30 மணியளவில், வைகறை ஆரத்தி, கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை, 7:30 மணியளவில், சாய்பாபாவிற்கு அபி?ஷக ஆராதனை, தத்தாந்ரேய அஷ்டோத்திர நாமாவளி பூஜை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு நடந்த சாய் பஜனையில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை, 6:00 மணிக்கு தூப் ஆரத்தி, சாவடி ஊர்வலத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், கோவிலைச் சுற்றி சுவாமி பவனி வருதல் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள், பாபாவின் அருளை பெற்றனர்.