பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
11:07
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், மங்கள தீர்த்த குளம் சீரமைப்பு பணி, தீவிரமாக நடந்து வருகிறது. காஞ்சிபுரத்திற்கு, வரும் பக்தர்களை கவரும் வகையில், பல்வேறு திட்டங்களின் கீழ், பணிகள் நடந்து வருகின்றன.இதில், ’பிரசாத்’ திட்டத்தின் கீழ், சுற்றுலா துறை சார்பில், பெரிய காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் மங்கள தீர்த்தம் குளம் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 11.85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, குளம் சீரமைப்பு பணி துவங்கியுள்ளது. குளத்தில் நடைபாதை, சுற்றுச்சுவர், வண்ணம் பூசுதல், நுழைவாயில், நுழைவு அலங்கார வளைவு அமைத்தல், அலங்கார மின்விளக்கு உட்பட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என, கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.