நான்கு மணிக்கு எழுந்திருங்கள். ஜெபம், தியானம் செய்யுங்கள். சாத்வீக ஆகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு நிறைய உணவு எடுத்துக் கொள்ளாதீர்கள். பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபம், தியானம் செய்யுங்கள். தியானத்திற்கென தனி அறையை ஒதுக்குங்கள். உங்கள் வருவாயில் பத்தில் ஒரு பங்கினை அல்லது ரூபாய்க்கு பத்து பைசாக்களை தர்மம் செய்யுங்கள். தினசரி பகவத் கீதையில் ஒரு அத்தியாயம் படியுங்கள். வீர்ய சக்தியைக் காப்பாற்றுங்கள். தனியாகப் படுத்துத் தூங்குங்கள். புகை பிடித்தல், போதை தரும் பாணம், உயர்தர உணவு ஆகியவற்றை விட்டுவிடுங்கள்.