ஏகாதசி தினம் உபவாசம் இருங்கள். அல்லது பால், பழங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். தினசரி இரண்டு மணிநேரம் மவுனத்தையும், சாப்பிடும்பொழுது மவுனத்தையும் கடைப்பிடியுங்கள். எந்நிலையிலும் உண்மையே பேசுங்கள், கொஞ்சமாக இனிமையாகப் பேசுங்கள். தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். திருப்தியாக சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துங்கள். மற்றவர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தாதீர்கள். எல்லாரிடமும் அன்பாக இருங்கள். நீங்கள் செய்த தவறுகளை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். வேலைக்காரர்களையே நம்பி இருக்காதீர்கள். சுயதேவவையை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.