பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
01:07
திருத்தணி: கங்கையம்மன் கோவில்களில், நேற்று நடந்த ஜாத்திரை விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சிக்குட்பட்ட எல்.என்.கண்டிகை கிராமத்தில், கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, காலை , 8:30 மணிக்கு கங்கையம்மன் மற்றும் சக்தியம்மன் கோவில் வளாகத்தில், கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை , 4:00 மணி முதல் மாலை , 6:00 மணி வரை கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, இரவு, 7:30 மணிக்கு, பூ கரகத்துடன், களி மண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், இரவு நாடகமும் நடந்தது. ஜாத்திரை விழாவில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.