பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
01:07
திருவள்ளூர் : திருவள்ளூரில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, வரும், 14, 15ம் தேதிகளில், 10 ஆயிரம் வாழைப்பழங்களால் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூல நட்சத்திரத்தன்று, முல மந்திர ஹோமம் நடத்தப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. வரும், 14, 15ம் தேதிகளில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப் பழங்களால், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியை, இந்த அற்புத திருக்கோலத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்.