சுவாமி கீதானந்தகிரி குருமகராஜின் 110ம் ஆண்டு பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2017 02:07
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில் யோகமகரிஷி சுவாமி கீதானந்தகிரி குருமகராஜின் 110ம் ஆண்டு பவுர்ணமி பூஜை நடந்தது. யோகாச்சாரணி மீனாட்சிதேவி பவனானி தலைமை தாங்கினார். மடாதிபதி ஆனந்தபாலயோகி, கிரிகுரு மகராஜ் சுவாமிக்கு அபிஷேகம் செய்தார். சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின் புதுச்சேரி இசைக்கலைஞர்கள் மற்றும் யோகாஞ்சலி நாட்டியாலயா மாணவர்களின் கர்நாடக வாய்ப்பாட்டிசை நடந்தது. தொடர்ந்து 1008 அகல் விளக்கு ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் மீனாட்சிதேவி பவனானி எழுதிய முனிவர்களும் அசுரர்களும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் சீனிவாசன், புலவர் பட்டாபிராமன், ஜெகதீசன், சிவசண்முகம் மற்றும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகாஞ்சலி நாட்டியாலயா பொது மேலாளர் சண்முகம் செய்திருந்தார்.