செஞ்சி: மகாதேவி மங்கலம் பிடாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. செஞ்சியை அடுத்த மகாதேவிமங்கலம் கிராமத்தில் பிடாரியம்மன், மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று பகல் 1:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பிடாரியம்மன், மாரியம்மனை தேரில் ஏற்றி வீதி உலா நடந்தது.
காலம் மாறியது: கிராமங்களில் நடக்கும் தேர்திருவிழாவில் பொது மக்கள் ஒன்று கூடி தேர் இழுப்பது வழக்கம். நேற்று வெயில் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் வெறும் காலுடன் தேர்இழுக்க முடியாமல், டிராக்டரில் இணைத்து தேர் இழுத்து வந்தனர்.