தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கோடி தீபம் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2017 02:07
வாலாஜா: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலக நன்மைக்காக, கோடி தீபம் ஏற்றுதல் மற்றும் கோடி அர்ச்சனை நேற்று நடந்தது. தொடர்ந்து, புஷ்பாண்ட தீபம், நெய் தீபம் ஏற்றி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், நவகிரக தோஷம், நட்சத்திர தோஷம் விலகவும் சிறப்பு பூஜை மற்றும், 16 லட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அன்னபூரணிக்கு அன்னாபி?ஷகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, கோடி தீபம் ஏற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு கோடி அர்ச்சனை நடந்தது.