திருவாடானை:திருவடானை அருகே கே.கிளியூர் கிராமத்தில் அய்யனார் கோயில் திருவிழா நடந்தது. பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். அய்யனாருக்கு சிறப்பு தீப, ஆராதனை நடந்தது. அன்னதானம் மற்றும் இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.