பதிவு செய்த நாள்
14
ஜூலை
2017
01:07
ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில், வரும், 19ல், முருகனுக்கு கிருத்திகை பூஜை நடக்க உள்ளது. ஆனந்தமலை முருகன் கோவிலில், வரும், 19ம் தேதி, முருகனுக்கு கிருத்திகை பூஜையும், ஏழு ெஹத்தையம்மனுக்கு மாதாந்திர பூஜையும் நடக்க உள்ளது. அன்று காலை , 10:00 மணிக்கு, சித்தி செல்வ விநாயகருக்கு, அலங்கார பூஜை, ஆனந்த மலை முருகனுக்கு அபிேஷக பூஜை , ஏழு ெஹத்தையப்பன் தெய்வத்திற்கு, ஆராதனை பூஜையும், நவக்கிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. அன்று காலை , க�ோவை வாசு குழுவினரின், பக்தி இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மதியம், 12:00 மணி முதல், 1:00 மணி வரை நஞ்சநாடு ரவி குழுவினரின் பஜனை இசை நிகழ்ச்சி நடக்கிறது. மதியம், 1:00 மணி முதல், 1:30 மணி வரை , தஞ்சை அருளாளர் ஆனந்த சித்தர், அருளுரை வழங்கவுள்ளார். மதியம், 2:00 மணி முதல், அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் ராமச்சந்திரன் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.