பதிவு செய்த நாள்
14
ஜூலை
2017
01:07
கோட்டயம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் பகவதி கோவிலில், மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி, ஜூலை, 17ல் துவங்கி ஆக., 16 வரை நடக்கிறது. எர்ணாகுளத்தில் இருந்து, 48 கி.மீ., கோட்டயத்தில் இருந்து, 39 கி.மீ., துாரத்தில், கூத்தாட் டுக்குளம் நெல்லிக்காட்டுமனாவில் அமைந்துள்ளது, பகவதி கோவில். கேரளாவின், மிகப்பழமையான கோவில்களில் ஒன்றான இங்கு, ஆடி மாதத்தில் அம்மனின் பிரசாதமாக, விசேஷமாக தயாரான மருந்து வழங்கப்படுகிறது. பண்டைய மருத்துவ ஓலைச்சுவடிகள் மற்றும் சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு, அம்மன் முன், மந்திரங்கள் முழங்க தயாராகும் இந்த மருந்து பிரசாதம், நோய்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதம் முதல் தேதியான, ஜூலை, 17 முதல் ஆகஸ்ட், 16 வரை, தினமும் காலை, 6:30 முதல் காலை, 11:30 வரை மருந்து பிரசாதம் வழங்கப்படும். இங்கு, ‘மருத்துவ கடவுள்’ எனப்படும் தன்வந்திரிக்கு தனிக் கோவில் உள்ளது. தினமும், காலை, 6:30 முதல், 9:30 மணி வரை , தன்வந்திரி ஹோமமும், மாலை, 6:00 முதல் இரவு, 7:30 மணி வரை நோய் தீர்க்கும் பூஜையும் நடக்கிறது. 17ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில், கணபதி ஹோமமும், 20யானைகள் கலந்து கொள்ளும் கஜபூஜையும் நடக்கஉள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தலைவர் என்.பி.நாராயணன் நம்பூதிரி, ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் என்.பி.பி. நம்பூதிரி, கோவில் நிர்வாகி ஹரி நம்பூதிரி செய்துள்ளனர். மேலும், விபரங்களுக்கு, 94460 35100ல் தொடர்பு கொள்ளலாம்.