விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முண்டியம்பாக்கம் செல்வ முத்துமாரியம்மன் கோவில் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 4ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷக நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். யாகசாலை மற்றும் அபிஷேக பூஜைகளை, சந்திரசேகர குருக்கள் செய்தார்.