பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
01:07
சத்தியமங்கலம்: பவானி ஆற்றில், படித்துறை அமைக்கும் பணி, கிடப்பில் உள்ளது. சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், பவானி ஆற்றங்கரையோரத்தில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலை ஒட்டி படித்துறை உள்ளது. இதனால் அப்பகுதிவாசிகள், ஆற்றில் துணி துவைக்க, பக்தர்கள் குளிக்க, பேருதவியாக இருந்தது. பல ஆண்டுகளானதால், அஸ்திவாரம் பெயர்ந்து, படிக்கட்டுகள் விழத்தொடங்கின. இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன், புது படித்துறை அமைக்க, பவானிசாகர் எம்.எல்.ஏ., ஈஸ்வரன் தலைமையில், பூமி பூஜை நடந்தது. ஆனால், துவங்கிய நிலையில், பணி கிடப்பில் உள்ளதாக, மக்கள் வேதனை தெரிவித்தனர். படித்துறை அமைக்க கொண்டு வரப்பட்ட கம்பிகளும், கரையோரம் தண்ணீரில் நனைந்து, துருப்பிடிக்கிறது என்றும் வேதனை தெரிவித்தனர்.