பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
01:07
ஓசூர்: அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, டிசம்பரில் ராமர் ரதயாத்திரை துவங்கப்படும், என, அகில பாரத இந்து மகா சபா துணைத்தலைவர் தாமோதரன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர அகில பாரத இந்து மகா சபா சார்பில், சானசந்திரம் காயத்திரி அம்மன் கோவிலில், நேற்று மாலை கோமாதா பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற, தாமோதரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வறட்சி நிலவுவதால், மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும், கோமாதா பூஜை நடத்தி வருகிறோம். மத்திய அரசு, பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, வரும் டிசம்பரில் ராமர் ரதயாத்திரையை துவங்க உள்ளோம். இது தொடர்பாக நான்கு நாட்களுக்கு முன், சாதுக்கள், சன்னியாசிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.