கோபி: ஆனி கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி, அம்மன் கோவில்களில், நேற்று பக்தர்கள் குவிந்தனர். கோபி அருகே பாரியூரில், பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில், ஆனி கடைசி வெள்ளியை ஒட்டி, நேற்று காலை முதலே, பக்தர்கள் அதிகம் வந்தனர். பெண் பக்தர்கள், 60 அடி குண்டத்து முன், நெய் விளக்கேற்றி வழிபட்டனர். உச்சிகால பூஜையின் போது, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.