பதிவு செய்த நாள்
17
ஜூலை
2017
10:07
தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கியது. இந்நாளில் கோயில், முன்னோர் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். ஆடிஅம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் (ஜூலை 18,25, ஆக.1,8, 15)வெள்ளிக் கிழமைகளில் (ஜூலை 21,28, ஆக. 4, 11) அம்மன் கோயில்களில் வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் கண்ணாடி வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்வர். இதை அணியும் கன்னியருக்கு திருமணம் கைகூடும்.
பிள்ளை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் உண்டாகும். மழை காலத்தின் தொடக்கமான ஆடியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினியான வேம்பு, எலுமிச்சை, எளிதில் ஜீரணமாகும் கூழ், அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். இது தவிர ஆடிக்கார்த்திகை (ஜூலை19), ஆடி அமாவாசை (ஜூலை23), ஆடிப்பூரம், நாகசதுர்த்தி (ஆக.26) கருடபஞ்சமி (ஜூலை 28), ஆடிப்பெருக்கு (ஆக.3), வரலட்சுமி விரதம் (ஆக.4), ஆடித்தபசு(ஆக.6), ஆடிப்பவுர்ணமி, ஆவணி அவிட்டம்(ஆக.7), மகா சங்கடஹர சதுர்த்தி (ஆக.11), கிருஷ்ண ஜெயந்தி (ஆக.14) என மாதம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்த வண்ணமிருக்கும். இத்தகைய சிறப்பு மிகுந்த ஆடியில் அம்மன் புகழ் பாடி வணங்குவோம்.