அம்மாபேட்டை: அம்மாபேட்டை அகோர வீரபத்ரசாமி கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. பவானி, அம்மாபேட்டை காவிரி ஆற்றங்கரையோரம் அகோர வீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. மழை பெய்ய, திருமண தடை நீங்க, சத்ருகள் தொல்லை நீங்க, குடும்ப ஒற்றுமை பெருக வேண்டி, மஹா ருத்ர யாகம் நேற்று நடந்தது. விநாயகர் பூஜையுடன் துவங்கி, மஹா சங்கல்பம், பூர்ணாகுதியுடன் யாகம் நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.