ராமேஸ்வரத்தில் ஆடித்திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2017 11:07
ராமேஸ்வரம்:ஆடித்திருக்கல்யாணம் விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றம் நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆடித் திருக்கல்யாணம் விழாவையொட்டி, நேற்று கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் திருவிழா கொடியை கோயில் குருக்கள் ஏற்றினர். பின் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது, இதில் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், பேஷ்கார்கள் பங்கேற்றனர். 16 நாட்கள் திருவிழா நடக்கும். தினமும் பர்வதவர்த்தினி அம்மன் பல்வேறு வாகனங்களில் உலா வருவார். ஆடி அமாவாசையான ஜூலை 23ல் ஸ்ரீ ராமர் அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளி, பக்தருக்கு தீர்த்த வாரி கொடுப்பார். அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, கோயிலில் தரிசனம் செய்வார்கள்.